LIVING STREAM MINISTRY

திரள் விநியோகத்திற்கான வெளியீடுகள்

இந்தப் புத்தகத் தொடரைத் தொடங்குவதற்கு


	கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1 
	கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 2 
	சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து 
	தேவனுடைய பொருளாட்சி 
	கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 3 
	ஜீவனின் அறிவு 
	மகிமையான சபை

இந்தத் தொடரிலுள்ள புத்தகங்கள் பிடிஎப்ஃ கோப்புகளாகப் பதிவிறக்கப்படலாம். பிடிஎப்ஃ கோப்புகளைப் பார்வையிடவும் அச்சிடவும் இலவசமாகக் கிடைக்கும் அடோபி ரீடர் உங்களுக்குத் தேவைப்படும். இந்தக் கோப்புகளுக்கான விநியோகக் கொள்கைகளைத் தயவுசெய்து மறுஆய்வு செய்துகொள்ளுங்கள். பதிவிறக்குவதற்காக வழங்கப்படும் கோப்புகள், மிக அடிப்படையானவை தொடங்கி மிக உயர்வானவைவரை, ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு வழங்கப்படும் தலைப்புகளைக்குறித்த உங்கள் புரிந்து கொள்ளுதலையும் பாராட்டுதலையும் அதிகரிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏழு புத்தகங்களினூடாய் முன்னேறிச் செல்வதில், இந்தத் தொடரின் அறிமுகமாக, கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1–லிருந்து நீங்கள் ஆரம்பிக்க வேண்டும், இது இந்தத் தொடருக்கு ஒரு அறிமுகமாக விளங்கும். பின்னர், அடுத்தத் தொகுப்பிலுள்ள மூன்று புத்தகங்களை அவை வழங்கப்பட்டுள்ள வரிசையில் வாசியுங்கள். இந்த இரண்டாவது தொகுப்பு, சில அடிப்படை கிறிஸ்தவ பழக்கங்களை வழங்குவதுடன், கிறிஸ்துவை எல்லாப் பொருட்களின் நிஜமாகவும், “தேவனுடைய பொருளாட்சி” (1 தீமோ.1:3) என்று வேதம் அழைக்கும் தேவனின் திட்டத்தின் மையமாகவும் அறிமுகப்படுத்துகிறது. இதனை அஸ்திபாரமாகக் கொண்டு, கடைசி மூன்று புத்தகங்கள், தெய்வ ஜீவனில் ஒரு விசுவாசியின் படிப்படியான அனுபவங்களை வெளிப்படுத்தி, சபையின்மூலம் தேவன் அடையவிரும்பும் இறுதியான இலக்கை வழங்குகிறது. இந்த முழுத் தொடரையும் இவ்வாறு படிப்படியாக வாசிப்பது தேவனையும் அவருடைய நோக்கத்தையும் அறிவதற்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.