பின்பக்க அட்டையிலிருந்து:
“1927-ல் வாச்மென் நீ கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான,
ஆவிக்குரிய மனிதன் என்ற தன் ஆவிக்குரிய உயர்தர இலக்கியத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் சகோதரன் நீ, மனிதன் மூன்று பகுதிகளால் தொகுக்கப்பட்டிருக்கிறான், அதாவது விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு விசுவாசிகளுக்குத் தேவையான மைய, அத்தியாவசிய வெளிப்பாடாகிய ஆவி, ஆத்துமா, சரீரம், என்ற எளிமையான வேதாகம சத்தியத்தை வழங்கினார். அந்த அஸ்திவாரத்தின்மேல்,
தேவனுடைய பொருளாட்சியில், வாச்மென் நீ-க்கு மிகநெருக்கமான, மிகவும் நம்பிக்கைக்குரிய உடன்-வேலையாளாகிய விட்னெஸ் லீ, வேதாகமத்தின் மைய வெளிப்பாட்டை, அதாவது சபையில் தேவனின் முழுமையான வெளியாக்கத்திற்காக தேவன் தம்மை மனிதனுக்குள் உட்செலுத்த விரும்புகிறார் என்ற மைய வெளிப்பாட்டைத் திரைநீக்கும்படி, தொடர்ந்து கட்டுகிறார்.
தேவனுடைய பொருளாட்சியில், தெய்வீகத் திரியேகத்துவத்தின் அசைவை சகோதரன் லீ தெளிவாக வெளிப்படுத்துவதோடு, தேவனுடைய நித்திய திட்டம் நிறைவேறுவதற்காக அவரோடு ஒத்துழைக்க விசுவாசிகளுக்கு நடைமுறை வழிகளையும் தருகிறார்.”
பதிவிறக்குக PDF
இந்தப் புத்தகத்தைப் பதிவிறக்குவதை வழிவகுக்க தயவுசெய்து விநியோகக் கொள்கைக்கு உடன்படவும்.