LIVING STREAM MINISTRY

திரள் விநியோகத்திற்கான வெளியீடுகள்

திரள் விநியோக பதிப்புகள் முகப்பு பக்கத்திற்கு நல்வரவு


	கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1 
	கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 2 
	சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து 
	தேவனுடைய பொருளாட்சி 
	கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 3 
	ஜீவனின் அறிவு 
	மகிமையான சபை
2003-ல் இருந்து, லிவிங் ஸ்ட்ரீம் மினிஸ்ட்ரி தம் வெளியீடுகளில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுப்பைத் திரள் விநியோகத்திற்காக வழங்கியுள்ளது. குறிப்பாக, ஏழு புத்தகங்கள் கொண்ட ஒரு தொடர் 40 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கின்றது, மேலும் கூடுதலான மொழிகள் அவ்வப்போது சேர்க்கப்படுகின்றன. இந்தத் திரள்-விநியோகப் பதிப்புகள், தேவனையும் அவருடைய நோக்கத்தையும் அறியும்படி தேடுபவர்களுக்கு, அவர்களுடைய தேசியம் அல்லது மொழி என்னவாக இருந்தாலும், பூமி முழுவதும் பரப்பப்படவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

இந்தத் தளத்தில் இந்த ஏழு வெளியீடுகளின் முழு உள்ளடக்கங்களையும் தற்போதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளில் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வளவசதிகளுக்கு ஏற்ப, புதிய மொழிகளை, அவை வெளிவருகையில், அவ்வப்போது இங்கு இணைக்க நாங்கள் முயற்சி செய்வோம். இந்தப் புத்தகங்கள் முழுவதையும் மிகவும் நன்மை பயக்கும் விதத்தில் வாசிப்பதற்கான உதவிபெற தொடக்கம் என்ற பகுதியை வாசிக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். எங்களோடு ஒருங்கிணைந்து செயல்படும் விநியோகஸ்தர்கள் மூலம் பல நாடுகளில் இப்போது கிடைக்கும் இந்தப் புத்தகங்களின் அச்சடிக்கப்பட்ட பிரதிகளை எவ்வாறு பெறுவது என்பது உட்பட, உங்கள் ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.